காலம் மாறுகிறது, மனிதனின் நல்ல குணங்களும் தேய்ந்து வருகின்றது. இயற்கையை அளவுக்கு மீறி அழித்ததின் விளைவை இன்று "மாசுபட்ட காற்று, வறண்ட நிலம் மற்றும் நீரில்லா நீர் நிலைகள்" என சந்தித்து வருகின்றோம். ஏதிர்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு நம் முன்னோர்கள் குளம் வெட்டி நீர் தேக்கினர், வாய்க்கால்கள் வெட்டி நீர் பாய்ச்சினர் மற்றும் பயணிகளுக்காக பொது நல நோக்கத்தோடு மரம் பல நட்டனர். ஆனால் நாம் இன்று சாளரம், கதவு என தனது தேவைகளுக்காக அழித்து வருகின்றோமே தவிர பெரும்பாலும் மரங்களையும் இயற்கையையும் பேணி காக்க முன் வருவதில்லை.
அத்தகையதொரு குறையை நீக்க புதிய புதிய சமூக அக்கறையுள்ள திட்டங்களை தீட்டி சிறப்பாக செயலாற்றி வரும் குழந்தை இயேசு இளையோர் இயக்கத்தினர் புயலென புறப்பட்டு தமிழ்ப்புத்தாண்டில் அருமையானதொரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். தீர்மானத்தின் சாராம்சம் இதோ
அத்தகையதொரு குறையை நீக்க புதிய புதிய சமூக அக்கறையுள்ள திட்டங்களை தீட்டி சிறப்பாக செயலாற்றி வரும் குழந்தை இயேசு இளையோர் இயக்கத்தினர் புயலென புறப்பட்டு தமிழ்ப்புத்தாண்டில் அருமையானதொரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். தீர்மானத்தின் சாராம்சம் இதோ
- முதற்கட்டமாக மரக்கன்றுகளை விலைக்கு வாங்கி ஆலயத்தில் இருப்பு வைப்பது.
- யாரேனும் தங்கள் தெருக்களில் நடவேண்டும் என கேட்டால் இலவசமாக வழங்குவது.
- தங்களால் நட இயலவில்லையெனில் இளையோர் இயக்கத்தினரே மரம்நடுவதில் உதவி செய்வது.
இயற்கையை பேணி காப்பதில் அக்கறை கொண்ட பங்கு மக்களில் சிலர் இளையோர் இயக்கத்தினரை தொடர்புகொண்டு மரக்கன்றுகளை பெற்று சென்றுள்ளனர். அது தவிர சாந்தி நகர் 22 வது தெருவில் அரசாங்கத்தால் வைக்கப்பட்டு காய்ந்து போன மரக்கன்று ஒன்று காணப்பட்டு அதிலே நமது மரக்கன்றை வைத்து பாதுகாப்போம் என தீர்மானிக்கப்பட்டது. இளையோர் இயக்கத்தினரால் புதிய மரக்கன்று ஒன்று இன்று நடப்பட்டது. இளையோரின் செயல்பாட்டை ஆதரித்து உற்சாகப்படுத்தும் வண்ணம் வான் மழை தூரி வாழ்த்து தெரிவித்தது இளையோருக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தை இயேசுவின் அருளாசீரோடு நிச்சயம் மேலும் பல சாதனைகள் புரிவோம்.
மரம் நடும் இளையோர்:
ஜெரால்ட், லால், அலெக்சாண்டர், ஜோயல், இக்னேசியஸ் & ராஜதுரை
1 comment:
Keep up the good work...join Saaral Help the Orphans Community in Orkut if u wish to share ur thoughts & interested in social service....
Post a Comment