Showing posts with label கொண்டாட்டங்கள். Show all posts
Showing posts with label கொண்டாட்டங்கள். Show all posts

Thursday, February 10, 2011

நாட்களும் நாமும்

நமது வாழ்க்கையில், சில நாட்களை நாம் மறக்காமல் ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் நினைவில் கொண்டு வந்து சிறப்பிக்கிறோம். அது ஒவ்வொரு தனிப்பட்ட நபரைச் சார்ந்து சற்றே மாறுபடுகிறது. பொதுவாக பார்த்தோமானால் பிறந்த நாள், திருமண நாள் எனவும், தனிப்பட்ட முறையில் தொழில் தொடங்கிய நாள், வேலைக்கு சேர்ந்த நாள், புதிய வீட்டிற்கு வந்த நாள் எனவுமாக நாட்கள் தனிச் சிறப்பை பெறுகின்றன.

இவ்வுலகம் நாடுகளுக்கேற்பவும், தனி இன, குழுக்களுக்கேற்பவும் அன்றாடம் ஏதேனும் கொண்டாட்டங்களையோ, துக்கங்களையோ ஒவ்வொரு நாட்களுக்குள்ளாகவும் இருத்தி வைத்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சில நாட்கள் மற்ற பகுதியினரால் ஈர்க்கப்பட்டு அவர்களால் பங்களிக்கப்பட்டு, பொது விழாவென உருவெடுத்து வந்திருக்கிறது.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில் இப்படி கொண்டாடப்பட்ட பல நிகழ்வுகள் அதன் சாராம்சத்தையே மறந்து, அதன் காரணங்களை முன்னிலைப் படுத்தாமல், ஆனந்தம் என்ற ஒன்றே அடிப்படை என மாற்றம் அடைந்து இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இளைஞர்களாகிய நாம் கொண்டாடும்  நாட்கள் எப்படி இருக்கின்றது?