அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின் ஒன்பதாவது திருநாளாகிய இன்று திருப்பலி நிறைவேறிய உடன் சப்பரப்பவனி நடைபெற்றது. இளையோர் இயக்கத்தின் சிறப்பான வழி நடத்துதலில் குறிப்பிட்ட நேரத்தில் சப்பரம் ஆலயத்தில் இருந்து சாந்திநகரின் தெருக்கள் வழியாக அருளாசீரை பொழிந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
இந்த அருமையானதொரு நாளில் குழந்தை இயேசு இளையோர் இயக்கத்தினரும் மற்றும் பலரும், தற்போதைய சூழலில் மோட்டார் வாகனத்தில்(Open type Jeep) பவனியாக கொண்டு செல்லப்படும் குழந்தை இயேசுவின் திருவுருவம் தோள்களில் கொண்டு செல்லப்படுமாறு மாற்றியமைக்க வேண்டும் என தங்களின் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். நிச்சயம் இது நல்ல நோக்கம் தான், ஏனெனில் இறைவனை நம் தோள்களில் தூக்கிச்செல்லும் போது பக்தி இன்னும் அதிகரிக்கின்றது.
படங்கள் :
குழந்தை இயேசுவின் திருவுருவம் & திருவுருவப்பவனியின் போது
No comments:
Post a Comment