கடந்த 9 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை, மிகச்சிறப்பான முறையில் நமது குழந்தை ஏசு ஆலயத்தில் மறைபரப்பு ஞாயிறு கொண்டாடப்பட்டது. இந்த சிறப்பானதொரு நாளில் இளைஞர் இயக்கத்தினரின் பங்களிப்பு பாராட்டுதலுக்குரியதாக அமைந்தது. குறிப்பாக ஒவ்வொரு சபையினரின் சார்பாக ஒவ்வொரு அங்காடி அமைக்கப்பட்டிருந்தது, அதில் பலராலும் விரும்பத்தக்கதாக அமைந்தது இளைஞர் இயக்கத்தினரின் அங்காடிகள் என்பது உற்சாகத்தை ஏற்படுத்துகின்றது. இளைஞர் இயக்கத்தின் சார்பாக டயரில் பந்து எறிதல், அம்பு எறிதல், பாட்டிலில் நீர் நிரப்புதல் போன்றவை இளைஞர்களாலும்; மெழுகுவர்த்தி ஏற்றுதல், புள்ளிகளை கண்டுபிடித்தல் போன்ற விளையாட்டுக்கள் இளம் பெண்களாலும் வழிநடத்தப்பட்டது.
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் விளையாட்டுக்களாக அமைந்ததில் பெரும் பங்கு நமது பங்குத்தந்தை ரெக்ஸ் ஜஸ்டின் அடிகளார், அருட்தந்தை ரூபஸ் அடிகளார் மற்றும் Sisters ஆகியோரையே சாரும். இந்த விழாவினை ஆயர் அவர்கள் தொடங்கி வைத்தது மேலும் சிறப்பூட்டுவதாக அமைந்தது.
நமது பங்கு மக்கள் இது போன்ற விழாக்களை நிச்சயம் வரவேற்பார்கள் என்பது அவர்களின் பங்களிப்பில் இருந்து உணரக்கூடியதாக அமைந்தது. ஏனெனில் இவ்விழாக்கள் நாம் நமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும், கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும், பங்கு மக்களுக்குள் அறிமுகம் கிடைக்கவும் ஒரு வாய்ப்பாக அமைகின்றது.
இவ்விழாவிற்காக சிறப்புற உழைத்த நமது இளைஞர், இளம் பெண்களை பங்கு மக்கள் பாராட்டியது, மீண்டும் இதுபோல் நாம் சிறப்புற செயல்படவெண்டு என்பதை உணர்த்தியது.
இதோ இவ்விழாவிற்காக நமது இளைஞர்கள் திட்டமிடும் நிழற்படங்கள்
2 comments:
hai very nice youth photos.one small obligation our THALA INFANT JESUS Photo was missing. pls try to up load it as quick as possible.
prayers ®ards
JOEL.J
நமது வாழ்க்கையில், சில நாட்களை நாம் மறக்காமல் ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் நினைவில் கொண்டு வந்து சிறப்பிக்கிறோம்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில் இப்படி கொண்டாடப்பட்ட பல நிகழ்வுகள் அதன் சாராம்சத்தையே மறந்து, அதன் காரணங்களை முன்னிலைப் படுத்தாமல், ஆனந்தம் என்ற ஒன்றே அடிப்படை என மாற்றம் அடைந்து இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இளைஞர்களாகிய நாம் கொண்டாடும் நாட்கள் எப்படி இருக்கின்றது?
பதிவு செய்தவர்: குழந்தை இயேசு இளையோர் இயக்கம் // நம் மறை பரப்பு ஞாயிறு நிகழ்வுகளும் இதற்கு விதிவிலக்கல்லவே! அர்த்தமுள்ள மறை பரப்பு ஞாயிறு நம் பங்கில் எப்போது?
Post a Comment