அன்புச்சகோதரர்களே, நாட்டில் கிறீஸ்தவ மக்களுக்கு மட்டுமல்ல, வேறு எந்த மதத்தை சார்ந்தவர்களுக்கு பிரச்சனை என்றாலும் நமக்கு வருத்தமே. பல இடங்களில் பெந்தகொஸ்தையினர் செய்யும் தவறுகளால், நாமும் தேவையில்லாமல் பாதிப்புக்குள்ளாகின்றோம். இது வருந்தத்தக்கது. நாம் இதனை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். நடந்து வரும் சம்பவங்களுக்காக ஓர் அரசியல் தலைவரின் கருத்து இதோ,
மத சகிப்புத் தன்மையற்ற, மத வெறியர்களால் பா.ஜ.க. ஆட்சியில் இடம்பெற்றுள்ள ஒரிசாவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த வன்முறைத் தாக்குதல்கள் பா.ஜ.க. ஆள்கின்ற கர்நாடகத்திற்கு பரவியிருக்கிறது. இத்துடன் நிற்காமல் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் பரவி கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தாக்குதல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் தலைதூக்கியிருக்கும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல் மேலும் பரவிவிடாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாநில அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
பல்வேறு மாநிலங்களிலும் மதத் தீவிரவாத சக்திகளால் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை பார்க்கும்போது, கிறிஸ்தவர்களுக்கு எதிரான இந்த வன்முறை திட்டமிட்ட செயல் என்பதும், இத்தகைய தாக்குதல்களால் மத உணர்வுகளை தூண்டி அரசியல் ஆதாயம் பெற மதத் தீவிரவாதிகள் முயற்சிக்கிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
எனவே, மத்திய, மாநில அரசுகள் விழிப்புடன் இருந்து மதத் தீவிரவாதிகளின் கோபமூட்டும் நடவடிக்கைகளை தொடக்கத்திலேயே கிள்ளியெறிய வேண்டும். நாட்டின் பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் மதத் தீவிரவாத சக்திகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்'' என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment