Friday, December 12, 2008
Tuesday, December 9, 2008
மறுமலர்ச்சி
கடந்த ஞாயிறு, நமது பங்கின் இளைஞர் இளம்பெண்களை வழி நடத்த பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தேர்ந்தேடுக்கப்பட்டவர்கள் நிச்சயம் நம்மை சிறப்பாக வழி நடத்துவார்கள் என்பதில் எந்த வித அய்யப்பாடும் தேவையில்லை என்பது நாம் உணர்ந்ததே. அதனைப்போல் பொறுப்பாளர்கள் தான் பொறுப்பாக செயல்படவேண்டும் என்பதில்லை, நாம் எல்லோருமே பொறுப்பாளர்கள் தான் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.
மாறிவரும் காலத்திர்க்கேற்ப நமது செயல்பாடுகள், நமது நோக்கங்கள் குழந்தை ஏசுவின் அருளால் நிச்சயம் மாண்புற அமையும் என நம்புவோம்.
மாறிவரும் காலத்திர்க்கேற்ப நமது செயல்பாடுகள், நமது நோக்கங்கள் குழந்தை ஏசுவின் அருளால் நிச்சயம் மாண்புற அமையும் என நம்புவோம்.
Wednesday, November 19, 2008
மறை பரப்பு ஞாயிறு
கடந்த 9 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை, மிகச்சிறப்பான முறையில் நமது குழந்தை ஏசு ஆலயத்தில் மறைபரப்பு ஞாயிறு கொண்டாடப்பட்டது. இந்த சிறப்பானதொரு நாளில் இளைஞர் இயக்கத்தினரின் பங்களிப்பு பாராட்டுதலுக்குரியதாக அமைந்தது. குறிப்பாக ஒவ்வொரு சபையினரின் சார்பாக ஒவ்வொரு அங்காடி அமைக்கப்பட்டிருந்தது, அதில் பலராலும் விரும்பத்தக்கதாக அமைந்தது இளைஞர் இயக்கத்தினரின் அங்காடிகள் என்பது உற்சாகத்தை ஏற்படுத்துகின்றது. இளைஞர் இயக்கத்தின் சார்பாக டயரில் பந்து எறிதல், அம்பு எறிதல், பாட்டிலில் நீர் நிரப்புதல் போன்றவை இளைஞர்களாலும்; மெழுகுவர்த்தி ஏற்றுதல், புள்ளிகளை கண்டுபிடித்தல் போன்ற விளையாட்டுக்கள் இளம் பெண்களாலும் வழிநடத்தப்பட்டது.
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் விளையாட்டுக்களாக அமைந்ததில் பெரும் பங்கு நமது பங்குத்தந்தை ரெக்ஸ் ஜஸ்டின் அடிகளார், அருட்தந்தை ரூபஸ் அடிகளார் மற்றும் Sisters ஆகியோரையே சாரும். இந்த விழாவினை ஆயர் அவர்கள் தொடங்கி வைத்தது மேலும் சிறப்பூட்டுவதாக அமைந்தது.
நமது பங்கு மக்கள் இது போன்ற விழாக்களை நிச்சயம் வரவேற்பார்கள் என்பது அவர்களின் பங்களிப்பில் இருந்து உணரக்கூடியதாக அமைந்தது. ஏனெனில் இவ்விழாக்கள் நாம் நமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும், கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும், பங்கு மக்களுக்குள் அறிமுகம் கிடைக்கவும் ஒரு வாய்ப்பாக அமைகின்றது.
இவ்விழாவிற்காக சிறப்புற உழைத்த நமது இளைஞர், இளம் பெண்களை பங்கு மக்கள் பாராட்டியது, மீண்டும் இதுபோல் நாம் சிறப்புற செயல்படவெண்டு என்பதை உணர்த்தியது.
இதோ இவ்விழாவிற்காக நமது இளைஞர்கள் திட்டமிடும் நிழற்படங்கள்
Tuesday, September 30, 2008
ரமலான் வாழ்த்துக்கள்
சக மனிதனை மதம், இனம், மொழி, பண்பாடு, கலாச்சாரம் கடந்து வாழ்த்துவது தமிழர் தம் பண்பாடு. ஆனால் சக மனிதனையும், நண்பர்களையும் வாழ்த்ததவறினால் அது மாபெரும் குற்றமாகும். இதோ பண் நீ பாடு
ரமலான்
உண்ணா நோன்பிருந்து
உயர்வான சிந்தைகள் பல கொண்டு
மறைவான எண்ணங்கள் தவிர்த்து
தானம் பல செய்து
தாவி அணைக்கும் ; சக
சகோதரனே!
துன்பங்கள் யாவும் மறைந்து
இன்பங்கள் யாவும் கூடி வர
வாழ்த்துகின்றோம்! வாழ்த்துகின்றோம்!
அனைத்து இசுலாமிய சகோதரர்களுக்கும் நெஞ்சம் நிறை வாழ்த்துக்களை குழந்தை ஏசு இளைஞர் இயக்கம் தெரிவித்துக்கொள்கின்றது.
Monday, September 29, 2008
துயரங்கள் குறித்து
அன்புச்சகோதரர்களே, நாட்டில் கிறீஸ்தவ மக்களுக்கு மட்டுமல்ல, வேறு எந்த மதத்தை சார்ந்தவர்களுக்கு பிரச்சனை என்றாலும் நமக்கு வருத்தமே. பல இடங்களில் பெந்தகொஸ்தையினர் செய்யும் தவறுகளால், நாமும் தேவையில்லாமல் பாதிப்புக்குள்ளாகின்றோம். இது வருந்தத்தக்கது. நாம் இதனை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். நடந்து வரும் சம்பவங்களுக்காக ஓர் அரசியல் தலைவரின் கருத்து இதோ,
மத சகிப்புத் தன்மையற்ற, மத வெறியர்களால் பா.ஜ.க. ஆட்சியில் இடம்பெற்றுள்ள ஒரிசாவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த வன்முறைத் தாக்குதல்கள் பா.ஜ.க. ஆள்கின்ற கர்நாடகத்திற்கு பரவியிருக்கிறது. இத்துடன் நிற்காமல் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் பரவி கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தாக்குதல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் தலைதூக்கியிருக்கும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல் மேலும் பரவிவிடாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாநில அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
பல்வேறு மாநிலங்களிலும் மதத் தீவிரவாத சக்திகளால் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை பார்க்கும்போது, கிறிஸ்தவர்களுக்கு எதிரான இந்த வன்முறை திட்டமிட்ட செயல் என்பதும், இத்தகைய தாக்குதல்களால் மத உணர்வுகளை தூண்டி அரசியல் ஆதாயம் பெற மதத் தீவிரவாதிகள் முயற்சிக்கிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
எனவே, மத்திய, மாநில அரசுகள் விழிப்புடன் இருந்து மதத் தீவிரவாதிகளின் கோபமூட்டும் நடவடிக்கைகளை தொடக்கத்திலேயே கிள்ளியெறிய வேண்டும். நாட்டின் பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் மதத் தீவிரவாத சக்திகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்'' என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்வோம்
நண்பர்களே!
நாம் நமது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும், நமது செயல்பாடுகளை எடுத்துரைக்கவும், இது ஒரு தொடர்புக்களமாக இருக்கும் என நம்புகின்றேன். நாம் நமது சேவைகளை விரிவுபடுத்தவும், நமது செயல்பாடுகள் சமூக தேவைகளாகவும், அவசியமானதாகவும் உருவாக்க இது ஒரு ஊன்றுகோலாக இருக்கும், இருக்கவேண்டும். நாம் நேரத்தை வீணடிப்பதை விட்டு விட்டு செயல்பாடுகளை பற்றி அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம். இதன் பெயரே InfantYouth ஆம் நமது இளைஞர்களுக்கானது.
"குழந்தை இளைஞர்கள்" நமது மனதை கள்ளம் கபடமில்லாமல், குழந்தை மனதுடன் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவும், அனைவருக்கும் பிடித்த குழந்தையாக, அதாவது சிறந்த செயல்பாடுகளை உருவாக்கவேண்டியவர்களாக இருக்கவேண்டும் என்பதாகும்.
நம்மை கடந்த காலங்களில் Alex அண்ணன் தலைவராக இருந்து Jerold, Alexandar & Lal அண்ணன்களுடன் சேர்ந்து நம்மை வழி நடத்திச்சென்றனர். நாம் தொடர்ந்து ஒற்றுமையுடனும், குழு மனப்பான்மையுடனும் செயல்பட்டு நமது இளைஞர் இயக்கத்தை புதியதொரு பாதைக்கு அழைத்துச்செல்ல கடமைபட்டிருக்கின்றோம்.
வாருங்கள் நமது சிறப்பானதொரு பயணத்தை தொடர்வோம்......................

Subscribe to:
Posts (Atom)