Thursday, June 13, 2013
Monday, March 21, 2011
அன்பின் காலம்
வேகமான வாழ்க்கையில், வருடங்கள் நிமிடங்களாக மறைகின்றது. சற்றே பின் நோக்கி பார்த்தோமானால் மட்டுமே இவ்வளவு தொலைவு கடந்திருக்கிறோம் என்பதை உணர முடியும். ஆனால் அதற்கான நேரங்கள் நம்மிடையே எந்த அளவுக்கு இருக்கிறது அல்லது அதற்காக நேரம் ஒதுக்கியிருக்கிறோமா என எண்ணியது உண்டா?
தற்போது அதற்கான அவசியம் ஏது?
எந்த ஒரு நாடும், தனி மனிதனும், வெற்றியாளனும் தொடர்ந்து நீடித்து நிலைத்து நிற்க வேண்டுமானால் அவர்கள் தங்கள் வெற்றிக்கு முந்தைய நிலையை என்றும் நினைவில் கொண்டாக வேண்டும். அப்பொழுதுதான் தாம் பழைய நிலைக்கு திரும்பிவிடக்கூடாதே என்ற முன்னெச்சரிக்கை என்றும் இருக்கும்.
சரி இதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?
வந்தாரையெல்லாம் வாழ வைக்கும் கள்ள கபடமற்ற நல் உள்ளமும், வழிப்போக்கர்க்கெல்லாம் அன்போடு உணவழித்த வரலாறைக் கொண்ட தமிழர்களாகிய நாம் இன்று எந்த நிலையில் இருக்கிறோம்?
தேவையற்ற பொழுதுபோக்கிற்கும், நேர நிர்வாகமின்மையாலும் காலங்களை வீணாக்கும் நாம், அன்பு செலுத்துவதற்கு நேரத்தை ஒதுக்குகிறோமா? அப்படியே ஒதுக்கினாலும் அது சந்தேகத்திற்கிடமில்லாமல் இருக்கிறதா? இல்லையேல் உள்ளே வெறுப்பும், வெளியே அன்புமாக வெறுமையுற்று இருக்கின்றதா நம் வாழ்வு?
இக்காலம் தவத்தின் காலம், மன்னிப்பின் காலம். நாம் சற்றே சிந்திக்க அழைக்கப்பட்டிருக்கும் இக்காலத்தில் எளியோரிடமும், நோயுற்றவர்களிடமும் எந்த அளவுக்கு அன்பு செலுத்தியிருக்கிறோம். இவர்கள் யாவரையும் விட நம்மோடிருக்கும் முதியவர்களுக்கென நாம் நேரம் ஒதுக்கியிருக்கிறோமா? நம் அருகிலிருப்போரிடம் அக்கறை கொண்டிருக்கிறோமா?
என நம்மை மறு ஆய்வுக்கு உட்படுத்தினால் நிச்சயம் விடை கிடைக்கும்.
என நம்மை மறு ஆய்வுக்கு உட்படுத்தினால் நிச்சயம் விடை கிடைக்கும்.
Monday, February 14, 2011
குழந்தை இயேசு இளையோர் இயக்கம்!!!
தமிழர் திரு நாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடும் தைத்திங்கள் முதலாம் நாளிலே, சாந்திநகர் குழ்ந்தை இயேசு திருத்தலத்தின் திருநாள்(15.01.2011)கொண்டாடப்பட்டது.அத்தகைய மகிழ்ச்சிகரமான நாளிலே "மேதகு ஆயர் ஏ.ஜூட் பால்ராஜ் மற்றும் பங்குத்தந்தை எஸ்.அல்போன்ஸ் அடிகளார்"ஆகியோருடன் எமது குழந்தை இயேசு இளையோர் இயக்கத்தினர்.
Thursday, February 10, 2011
நாட்களும் நாமும்
நமது வாழ்க்கையில், சில நாட்களை நாம் மறக்காமல் ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் நினைவில் கொண்டு வந்து சிறப்பிக்கிறோம். அது ஒவ்வொரு தனிப்பட்ட நபரைச் சார்ந்து சற்றே மாறுபடுகிறது. பொதுவாக பார்த்தோமானால் பிறந்த நாள், திருமண நாள் எனவும், தனிப்பட்ட முறையில் தொழில் தொடங்கிய நாள், வேலைக்கு சேர்ந்த நாள், புதிய வீட்டிற்கு வந்த நாள் எனவுமாக நாட்கள் தனிச் சிறப்பை பெறுகின்றன.
இவ்வுலகம் நாடுகளுக்கேற்பவும், தனி இன, குழுக்களுக்கேற்பவும் அன்றாடம் ஏதேனும் கொண்டாட்டங்களையோ, துக்கங்களையோ ஒவ்வொரு நாட்களுக்குள்ளாகவும் இருத்தி வைத்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சில நாட்கள் மற்ற பகுதியினரால் ஈர்க்கப்பட்டு அவர்களால் பங்களிக்கப்பட்டு, பொது விழாவென உருவெடுத்து வந்திருக்கிறது.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில் இப்படி கொண்டாடப்பட்ட பல நிகழ்வுகள் அதன் சாராம்சத்தையே மறந்து, அதன் காரணங்களை முன்னிலைப் படுத்தாமல், ஆனந்தம் என்ற ஒன்றே அடிப்படை என மாற்றம் அடைந்து இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இளைஞர்களாகிய நாம் கொண்டாடும் நாட்கள் எப்படி இருக்கின்றது?
Subscribe to:
Posts (Atom)


