Saturday, November 21, 2009

ஊடகங்களின் வளர்ச்சி - இளையோர் வாழ்வில் எழுச்சியா? தளர்ச்சியா?

சமுதாயத்தின் வளர்ச்சி என்பது இன்றைய காலக்கட்டத்தில் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சியை சார்ந்ததாகவோ அல்லது அதனை மையமாக வைத்தோ தான் இருக்கின்றது. தொடர்புச்சாதனங்கள் தான் பல வித புதுத்தொழில்நுட்பங்களுக்கும், புதிய கண்டுபிடிப்புக்களுக்கும் அடி நாதமாக விளங்குகின்றது. தந்தியில் ஆரம்பித்து, தொலைபேசி, அலைபேசி, ப்ளூடூத், சென்சார் என இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் செயற்கைக்கோள், டிவி, ரேடார், ரோபோ, இராணுவம், சினிமா, இணையம் என மனிதனின் பொழுதுபோக்கு, ஆடம்பர பொருட்கள் அமைந்துள்ளது.

ஒரு காலக்கட்டத்தில் புறா, நம்பிக்கைகுரிய நபர்கள் என ஒருவரிடமிருந்து மற்றவருக்கு உறுதியாக சென்றடைந்து விடும் என்ற உறுதித்தன்மையில்லாமல் தகவல்கள் பரிமாறப்பட்டன. ஆனால் இன்று அடுத்த நொடியே நம் விருப்பங்களையும், நிகழ்வுகளையும் வெளிப்படுத்த, அறிந்துகொள்ள நவீன தொழில் நுட்பங்கள் உதவுகிறது.

இப்படி ஒரு தனி நபரையோ, சமுதாயத்தையோ குறித்த தகவல்கள், வாழ்க்கைமுறைகள் படிப்படியாக ஏனைய நபராலோ, சமுதாயத்தாலோ பின்பற்றப்பட்டு தமது வாழ்வில் புதியதோர் பார்வையை கொண்டுவர ஊடகங்கள் துணைபுரிந்தன. முந்தைய காலகட்டங்களில் வளர்ச்சி என்பது நாகரீகம், பண்பாடு, குடும்ப அமைப்பு, வாழ்வியல் சூழல் என்ற பார்வையிலே பார்க்கப்பட்டது. ஆனால் இன்று வளர்ச்சியை எண்களால் நிர்ணயிக்கும் ஒரு மாய உலகிற்கு வந்திருக்கின்றோம்.

வளர்ச்சியை பொருளாதாரத்தால் பார்க்கும் கண்ணோட்டத்தை கொடுத்தது யார்? ஊடகங்கள். ஆம்! ஊடகங்கள் ஒரு மனிதனை மேன்மைப்படுத்தவதையோ, சிறுமைப்படுத்துவதையோ சாத்தியப்படுத்துகின்றன. ஊடகங்கள் பெரும்பாலும் ஒர் சார்புத்தன்மையாகவோ அல்லது வியாபார நோக்கோடுதான் செயல்படுகின்றன. பொது நல நோக்கோடு செயல்படும் ஊடகங்களின் எண்ணிக்கையை மொத்த ஊடகங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது வருத்தமே மிஞ்சும்.

இத்தகைய தொழில்நுட்பங்களை, ஊடகங்களை அதன் அபரிவிதமான வளர்ச்சியை பலரால் சரிவர புரிந்துகொள்ளவோ அல்லது சரிவர பயன்படுத்தவோ தெரியவில்லை. எதற்காக இந்த தொழில் நுட்பம்? எதற்காக இந்த ஊடகம்? இதனை எங்கனம் உபயோகப்படுத்தினால் நம் வாழ்வு சிறக்கும்? என்ற கோணத்தில் புரிந்துகொள்ளாமல், தனது மனதின் சிற்றின்ப ஆசைகளுக்கு அடிபணிந்து அதன் உபயோகத்தன்மையையே சிதைக்கும் ஒரு சூழல் தான் இளையோரிடம் உள்ளது.

தொலைக்காட்சி - இன்றைக்கு இந்தியாவிலே 417 அலைவரிசைகள் இருப்பதாக கூறப்படுகின்றது. இதிலே செய்திச் சானல்கள் 70 மற்றும் உபயோகமான சானல்கள் ஏறத்தாழ 54. இது 12 விழுக்காடாகும்.
ரேடியோ - ஒரு சில சமுதாய வானொலிகளைத் தவிர ஏறக்குறைய 70 சதவிகிதத்திற்குமேல் சினிமாச் செய்திகளைத்தான் வெளியிடுகின்றன.
இதழ்கள் - இவையும் பெரும்பாலும் சினிமா, பகையுணர்வை வளர்ப்பதிலே தான் ஆர்வமாக இருக்கின்றன.

இத்தகைய ஊடகங்களை நாம் கண்ணோக்கும் பார்வை தவறா? அல்லது அவசியமில்லா அனாவசியமானவற்றை வெளியிடும் ஊடகங்கள் தவறா? என்று கேட்போமானால் இருவர் கரங்களும் மற்றொருவரையே காட்டும்.
ஒழுங்காக ஆடிப்பாடி, ஓடி விளையாடிக்கொண்டிருந்த இளையோர் இன்று ஓட்டமின்றி தொலைக்காட்சியில் வரும் ஆட்டத்தை மட்டும் பார்த்து வயிறு வளர்க்கின்றனர். விளையாடும் ஆர்வமும், உடல் திறனும் வலுவிலக்க யார் காரணம்? வீணான நேரத்தை போக்க வந்த ஊடகங்கள் இன்று இளையோரின் நேரத்தை வீணாக்குவதில் முதலிடம் வகுப்பது எதனால்? நம்மில் பலர் கேட்கலாம் சரியானவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளலாமே என்று!

சுவையான உணவு, சுவையில்லா ஆரோக்கிய உணவு இரண்டையும் நம் முன் வைத்தால், பலரது விருப்பம் சுவையான உணவாகத்தான் இருக்கும். ஏனெனில் நம் உடல்தான் ஆரோக்கியமாக இருக்கிறதே! என்ற எண்ணம் நம் மனதில் மேலோங்கி அதன் பேரில் விருப்பம் கொள்ள வைக்கின்றது. ஊடகங்களில் நல்ல விடயங்களும் இருக்கிறதே! என்போமானால் அது இதனைப்போலத்தான் இருக்கும்.

கற்றுக்கொள்ள ஆர்வமிருக்கும் இளையோரும் மாறுபட்ட தகவல்கள் மற்றும் வியாபார நோக்கங்களோடு வெளியிடும் ஊடகங்களால் ஒரு குழப்ப நிலைக்கு ஆளாகின்றனர். எது சரி? என்று தேர்ந்தெடுப்பதில் ஆரம்பிக்கும் குழப்பம், சோம்பேறித்தனம், உழைப்பின்மை, சோர்வு என யாவும் சேர்ந்து இறுதியில் திறனற்றவனாக மாற்றிவிடுகின்றது. இன்றைக்கு பெரும்பாலான பெற்றோர்கள் தனது மகன்/மகள் கணிணியில் அதிக நேரத்தை செலவழிக்கிறான்/ள், தொலைக்காட்சியில் அதிக நேரத்தை வீணாக்குகின்றான்/ள் என புலம்புவதை நம்மில் அனைவரும் உணர்ந்திருப்போம்.

ஊடகங்கள் இல்லாக் காலத்தில் இதனை விட மாண்போடு இளைஞன் இருந்தான். நாட்டிற்காக உழக்கவேண்டும், வீரத்தை நிலை நாட்ட வேண்டும், கண்டங்கள் கடந்து வியாபாரம் செய்யவேண்டும் , நல்லதோர் குடிமகனாக இருக்கவேண்டும் என எண்ணினான். இன்றும் இளையோரிடம் அச்சிந்தனை இருக்கின்றது, ஆனால் அது சுய நலம் எனும் சாயம் போர்த்தி இருக்கின்றது. இத்தகைய நிலைக்கு இளையோரை கொண்டுவந்தததில் ஊடகங்கள் தான் முன்னிலை வகிக்கின்றது.

Sunday, September 13, 2009

புதிய உறுப்பினர்கள் இணைப்பு


                இளையோர் இயக்கத்திற்கு புதிய உறுப்பினர்களை இணைப்பது குறித்து இன்று நடந்த கலந்தாய்வில் முடிவெடுக்கப்பட்டது. எண்ணற்ற இளையோர் உள்ள பங்கு குடும்பத்தில், குறைவான அளவில் உறுப்பினர்கள் உள்ளது மனக்குறையே. உறுப்பினர்கள் அதிகரிக்கும்போது செயல்பாடுகள் அதிகமாகும். அதனோடு கூட புதிய எண்ணங்களும், புதிய செயல் திட்டங்களுக்கு கிடைக்கும்.
  

தற்போதைய செயல்பாடுகள்
  • ஆலயப்பணிகள்
  • இரத்த தானம்
  • விடுமுறை வேதாகமப் பள்ளி (VPS)
  • கிறிஸ்துமஸ் கேரல்ஸ்
  • கிறிஸ்துமஸ் ட் ரீ (குலுக்கல் முறையில் பரிசு வழங்குதல்)
  • சிறைச்சாலை சந்திப்பு
  • மருத்துவமனை சந்திப்பு
  • ஏழ சிறுவர்களுக்கு கல்வி கற்க உதவி
  • ஏழை திருமணத்திற்கு இயன்ற உதவிகள் செய்தல்
  • பங்கு கிளைப் பங்குகளில் நற்செய்திப் பணி
  • கிளைப் பங்குகளில்  சிலுவைப் பாதை
  • ஞாயிறு மறைக்கல்வி

        தொடர்ந்து எமது பணிகள் சிறப்பாகச் செயல்படுவதற்கு பங்கு குடும்பத்தில் உள்ள  இளைஞர், இளம்பெண்கள் இளையோர் இயக்கத்தில் இணைந்து செயல்பட உற்சாகப்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை. புதிய உறுப்பினராக சேருவதற்கு விருப்பமுள்ள 16 வயதிற்கு மேற்பட்ட இளையோர் பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்.

Sunday, August 23, 2009

வாழ்த்துவோம் !!!

இளைஞர்களுக்கு மகிழ்ச்சி தரும் நிகழ்வு ஒன்று இனிதே நடந்தேறியுள்ளது. ஆம் அகில உலக கிறிஸ்தவ அமைப்பு (IYCS), அகில உலக கத்தோலிக்க அமைப்பு(ICO) மற்றும் அகில உலக அரசு சாரா அமைப்பு(NGO) ஆகியவற்றின் புதிய ஒருங்கிணைப்பாளராக சென்னை - மயிலை உயர் மறை மாவட்டத்தின் ஆர். ஏ. புரம் பங்கின் ஒருங்கிணைப்பாளர் தீபக் நியமிக்கப்பட்டுள்ளார். நமது தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இத்தகைய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது நமது இளைஞர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் விஷயமாகும்.

அவரை நமது இளைஞர் இயக்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம். பல்வேறு நாடுகளின் இளைஞர் அமைப்புக்களை ஒருங்கிணைக்கும் அவரோடு இணைந்து, அவர் கருத்துக்களை அறிந்து செயலாற்ற நாமும் விழைவோம்.

நன்றி:
நம் வாழ்வு
23 -08 -2009

Tuesday, July 14, 2009

இளைஞனே! இருத்தலா? இயக்கமா?

நண்பா! ...
ஒரு நிமிடம்.....
இளைஞனே ! இருத்தலா? இயக்கமா? என்ன என்பதும் உன்னைப் பொறுத்ததே. இருத்தலில் இருக்கும் எந்தவொரு பொருளும் இயங்கவில்லை என்றால் வாழ்வு என்பது  சாத்தியமாகாது! அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்கள் கூட ஓர் இடம் விட்டு மற்றொரு இடம் மாறினால் மட்டுமே மனிதர்களுக்கு பயன்படும். இல்லையேல் சங்கடமாகிவிடும். இருத்தலும் இயக்கமும் நம்முடைய எண்ணத்தின் வெளிப்பாட்டிலிருந்தே உதயமாகின்றது.

இளைஞனே! உன் எண்ணத்தை தூயதாக்கு!
இலக்கை கூர்மையாக்கு!
நடையை விரைவாக்கு!
சொல்லை  செயலாக்கு!
வாடி விடும் மலர் கூட இதழ் விரித்து சிரிக்கின்றது!
வாழ்ப்பிறந்த உனக்கேன் அழுகை பிறக்கிறது?
இமைகளை பூட்டி விழிகளை சிறை வைக்காதே
பூட்டை உடைத்தெறி! நம்பிக்கை ஒளிக்கீற்று 
உன் நரம்பெல்லாம் ஊடுருவட்டும்.
மூட்டப்பூச்சிக் கூட முடங்கி இருப்பதில்லை
மூளை கொண்ட மனிதனே......... இன்னுமா அச்சம்?
நீ சும்மா இருந்தால் சுகமே உன் சுமையாகும்
 இன்று வந்த காற்று நிரந்தரமல்ல. நாளை
வரும் என்று உறுதி இல்லை - எனவே
இன்று வரும் தென்றலில் அசைந்தாடு
நாளைய சூறாவளியில் எதிர்நீச்சல் போடு 
விரைவாக உன் சிறகை விரி! வானில் தடையேதுமில்லை!
இனி உன் முயற்சிக்கு வானம் தான் எல்லை!
தூங்கிய தூக்கம் போதும்; தூக்கத்தை தூக்கி எரிந்து புறப்படு!
தூங்கும் உன் சுற்றத்தாரை நீ தூண்டிஎழுப்ப  புறப்படு!
உனக்குள்ளே உனக்குள்ளே ஓராயிரம் ஒழி கீற்றுகள்
உள்ளடக்கி உள்ளதென உணர்ந்து நீ புறப்படு! உன்
இருவிழிப் பார்வைகளின் இமைகளை நீ திறந்து பார்
இருளானது நின் விழியைக் கண்டதும் மறைந்துவிடும்
சிந்தித்துப்பார்......................
குடிசையில் வாழ்ந்தவர் தான் - முன்னாள் குடியரசு தலைவர்
குடிமகனே முயன்றால் - நீ நாளைய குடியரசு தலைவர்...
அழுது பிறந்தாய் இறந்தாலும் அழுவார்!
நண்பா - முதலும் முடிவும் அழுகை மட்டும்தான் மிச்சம் என்பதை
புரிந்துகொள்!
 
நண்பா! 
எழு விழித்திடு இலக்கு அடையும் வரை நிற்காதே!
வாழ்வின் ஓட்டத்தில் தடைகள் வந்தாலும் தகர்த்தெறி!
மீண்டும் எழுந்து ஒழி வீச - வாழ - வளர வாழ்த்துரை ஏற்க - 
வரலாறு படைக்க வீறு கொண்டெழு!
என்னத்தை படைப்பாக்க!
சமுதாயத்தைச் செம்மையாக்க!
மனிதத்தை வளமாக்க வாராய்!
இளைஞனே......... 

ஆக்கம்: திருமதி. அருள்சீலி அந்தோணி 
நன்றி: www.anbinmadal.org

Sunday, April 12, 2009

அகவிருள் அகற்ற அருளொளி பிறந்தது

உயிர்ப்பு இந்த வார்த்தைக்குள் எத்தனை அர்த்தங்கள் பொதிந்துள்ளது. "காலங்கள் யாவும் அவருடையன" என்ற திரு வாக்கிற்கேற்ப கடந்து வந்த துன்ப காலங்களை நீக்கி உண்மையான, மகிழ்வான வாழ்விற்கு நம்மை அழைத்துச்செல்லும் உயிருள்ள உணவாக நமக்காக தன் இன்னுயிரையே ஈந்து உயிர்த்தார்.

தவக்கால நிகழ்வுகள்:


1. புனித வியாழன் 2&3. இரத்ததான முகாம் - புனித வெள்ளி


4. உயிர்ப்பின் தயாரிப்பில்