
ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான முன் முயற்சியினாலும், முன்னாள் இளையோர் இயக்கத்தினரின் பேரூதவியினாலும் இம்முயற்சி வெற்றியடைந்தது. பங்குத்தந்தை ரெக்ஸ் ஜஸ்டின் அடிகளாரின் சிறந்த ஆலோசனைகளும் , ஆயர் அவர்களின் அனுமதியும் இளையோருக்கு பெரும் ஊக்கத்தை அளித்து பாலன் இயேசு பாமலர் மக்கள் கரங்களில் தவழவும், இறைவனைப் புகழ்ந்து பாடவும் உறுதுணையாய் அமைந்தது.